அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட ஆடுகள் மீட்பு

Report Print Kumar in சமூகம்
56Shares

திருகோணமலை மாவட்டத்தில் மூதூரிலிருந்து கல்முனைக்கு அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட செம்மறி ஆடுகளை இன்று(10) களுவாஞ்சிக்குடி பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் ஆடுகளைக் கடத்திய நபரும் கைது செய்யப்பட்டார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலாலின் பணிப்புரையின் பேரில் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி.பொடி பண்டார தலைமையிலான பொலிசார் வீதிச் சோதனை ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதன் போது வாகனத்திலிருந்த செம்மறி ஆடுகளைக் கைப்பற்றியதோடு கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டது.

மேலும் குறித்த சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் பதில் நீதிபதி ஏ.மனாப் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது கைது செய்யப்பட்ட நபரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Comments