மிஸ்டர் சிறிலங்காவாக தெரிவாகிய தமிழ் இளைஞன்..!

Report Print Thiru in சமூகம்
2440Shares

ஜுனியர் மிஸ்டர் சிறிலங்காவாக தெரிவாகி புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.

இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் புஸ்ஸல்லாவயை சேர்ந்த இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் என்பவரே 2016 ஆம் ஆண்டிற்கான ஜுனியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார்.

35 போட்டியாளர்களை பின்தள்ளி குறித்த இளைஞன் இந்த பட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக மலையக இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இருந்த போதும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களும், உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காத காரணத்தினால் பல சாதனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்றனர்.

வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் என்ற எடுத்துக்காட்டை கூறுகின்றார் இந்த இளைஞர்.

2015 ஆம் ஆண்டும் இதேபோன்றொரு பட்டத்தை குறித்த இளைஞன் பெற்றிருந்தார். இம்மாணவன் புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் உயர்தரம் (12) உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞனின் வெற்றிகள் தொடர்பான விபரங்கள்

• 2014 - கண்டியில் நடைபெற்ற திறந்த அனைத்து பிரிவினர்களுக்கான ஆணழகர் போட்டியில் மூன்றாம் இடம்.

• 2015 - கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காக ஹங்வெலயில் நடந்த போட்டியில் முதலாம் இடம்.

• 2016 - தேசிய ரீதியில் நடைபெற்ற மிஸ்டர் நோவிஸ் உடற்கட்டு போட்டியில் 3 ஆம் இடம்.

• கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 2016 தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான திறந்த ஆணழகர் போட்டியில் முதலாம் இடம்.

• தற்போது விமானபடை விளையாட்டு குழுவிற்கும் தெரிவாகி உள்ளார்.

இந்த தொடர் வெற்றிகள் தொடர்பாக மாதவன் ராஜ்குமாரனிடம் வினவிய போது,

இப்போட்டியில் வெற்றி பெற உதவிய எனது பெற்றோர்களான பரமேஸ்வரி மாதவன்¸ இந்து தேசிய கல்லூரி அதிபர்¸ உட்பட ஆசிரியர்கள் கண்டி பவர் ரீ கிரியேட் சென்டர் உரிமையாளர் பாக்கியராஜ் ஐயா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலும் நுவரெலியா எப்சலூட் ஜிம் உரிமையாளரும்¸ பயிற்றுவிப்பாளருமான அமில தர்மதிலக ஐயா, இப்போட்டிக்கான தொடர்ச்சியாக அனுசரனை வழங்கிய கொழும்பு ஜனதா ஸ்டீல் உரிமையாளர் வாசுதேவன் ஐயா அவர்கள்¸ கொழும்பு டையன் ஸ்டீல் ஹாட்வெயார் உரிமையாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Comments