தொழில் செய்து கொண்டிருந்த பெண் 50 அடி உயரத்திலிருந்து விழுந்து பலி

Report Print Thiru in சமூகம்

கொத்மலை பிரதேசத்தில் பெண்கள் தேயிலை பறிப்பதை கண்கானித்து கொண்டிருந்த பெண்ணொருவர் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஹெல்பொட தோட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் விமலாவதி (வயது 47) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments