8 அடி உயரமான சுவர் இடிந்து வீழ்ந்து சிறுமி பரிதாபமாக பலி..!

Report Print Nivetha in சமூகம்
94Shares

ஹோமாகம – பிட்டிபன பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த வீட்டின் 8 அடி உயரமான சுவர் இடிந்து வீழ்ந்ததில், சிக்குண்டு பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி 8 வயதானவர் எனவும் அவர் பனகொடயில் உள்ள பாடசாலை ஒன்றில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments