பதுளை வியலுவ பகுதியில் இராட்சத அணில் ஒன்றை பயமுறுத்த முயற்சித்த நபரின் ஆசை வேதனையில் முடிந்துள்ளது.
விளக்கு ஒன்றை வைத்தே குறித்த அணிலை பயமுறுத்த அந்த நபர் முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபரின் கையிலிருந்த விளக்கு வெடித்ததில் அவர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவத்தையடுத்து குறித்த அணில் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளது.
இதேவேளை குறித்த நபர் காயங்களுக்கு மத்தியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.