கிராமசேவையாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி மகஜர் கையளிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்டம் பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் கிராமசேவையாளரை இடமாற்றம் செய்யமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜர் பொது நோக்கு மண்டபத்தில் வைத்து இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த மகஜரை வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ம.ஆனந்தராஜிடம் அப்பகுதி மக்கள் கையளித்துள்ளனர்.

இதன்போது, தமது பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் கிராம சேவையாளர் சிறந்த சேவையினை வழங்கவில்லை. மாறாக தனக்குத் தேவையானவர்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும் தமது கிராம நலனில் அக்கறையற்றுச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மகஜரினை பெற்றுகொண்ட ம.ஆனந்தராஜ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும், அரசாங்க அதிபர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தனக்கு உறுதியளித்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் அப்பகுதி மக்களினால் வீடு பெற்றுத்தருமாறு கோரி வீதியிலிருந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

Comments