யாழ் சுன்னாகம் நிலத்தடி நீரினை குடிக்கலாமா..? வேண்டாமா..? வழக்கு ஒத்திவைப்பு

Report Print Vino in சமூகம்
62Shares

யாழ். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.

குறித்த பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீரினை குடிக்கலாமா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை முறையான அறிக்கை எதுவும் நீதிமன்றில் சமர்பிக்கப்படவில்லை என நீதவான் ஏ.யூட்சன் தெரிவித்திருந்தார்.

பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பில் இதுவரை எதுவித ஆக்கப்பூர்வமான நடிவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Comments