உயர்மட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கையின் 3 மீனவர்களும் இந்தியாவின் 51 மீனவர்களும் இன்று அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழ் நாட்டில் இருந்த வந்த நிலையில் கைது செய்யப்பட்டு ஜனவரி 6ஆம் திகதியன்று இலங்கையின் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட 51 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையினரிடம் கையளித்தனர்.
அதேநேரம் ஜனவரி 8 ஆம் திகதியன்று சென்னை புழல் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட 3 இலங்கை மீனவர்களை இந்திய படையினர், இலங்கையிடம் கையளித்தனர்.
இவர்கள் விடுதலை அண்மையில் இரண்டு நாட்டு அமைச்சர் நிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.