இலங்கை, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டுதலை கட்டுப்படுத்த அவசர தொலைபேசி அறிமுகம்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை, இந்திய கடல் பகுதியில் இரண்டு நாட்டு மீனவர்களும் கைதுசெய்யப்படும் நடவடிக்கைகளை தெரியப்படுத்துவதற்காக இரண்டு நாட்டு எல்லைப்படை வீரர்களும் அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த அவசர தொலைபேசி இலக்கம் உள்ளூர் மற்றும் தலைமையக அளவில் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தானுடன் இவ்வாறான அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என கூறப்படுகின்றது. எனவே, இலங்கை இந்த திட்டத்தின் இரண்டாவது நாடாக வந்துள்ளது.

மேலும், இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான யோசனை தற்போது இரண்டு நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்களில் இறுதிக்கட்டதை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments