தன்னை பொலிஸார் தாக்கினார்கள் : பெண் ஒருவர் முறைப்பாடு

Report Print Vino in சமூகம்
145Shares

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நிதி குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டபோது, தன்னை பொலிஸார் தாக்கியதாக கூறி பெண் ஒருவர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நிதி மோசடி அலுவலகத்திற்கு முன்னால் தன்னை பொலிஸார் ஒருவர் தள்ளிவிடும் வேளையில் ஒருவரின் கைகளில் விழுந்ததாக அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீரவன்சவினை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வேளையில், அவரது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments