செட்டிகுளத்தில் 87 வீடுகளுடன் புதிய கிராமம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
132Shares

வவுனியா, செட்டிகுளம், பெரியகுளம் பகுதியில் தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் "செமட்ட செவண" திட்டத்தின் கீழ் 87 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு புதிய கிராமம் ஒன்று உதயமாகிறது.

குறித்த பகுதியில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் நிதியுதவியில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (11) இடம்பெற்றது.

வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் ஓர் கட்டமாக செட்டிகுளம், பெரியகுளம் பகுதியில் புதிதாக காணி வழங்கப்பட்ட 87 பேருக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில் காணிகளற்ற மற்றும் உப குடும்பங்களைச் சேர்ந்த 87 பேருக்கு செட்டிகுளம், பெரியகுளம் பகுதியில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன.

அம் மக்கள் இக் காணிகளில் குடியேறும் வகையில் இவ் வீட்டுத்திட்டம் வழங்கப்படுகிறது.

இப் புதிய கிராமத்திற்கான வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர்களில் ஒருவரான சிவலிங்கம், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் சந்திரமோகன், செட்டிகுளம்உதவிப் பிரதேச செயளலாளர் முகுந்தன், கிராம அலுவலர் மற்றும் அப்பகுதியில் குடியேறவுள்ள மக்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Comments