காலநிலை மாற்றத்தினால் அசௌகரியத்தின் மத்தியில் வவுனியா மக்கள்

Report Print Theesan in சமூகம்
56Shares

வவுனியாவில் கடும் வறட்சி நிலவுவதால் மக்கள் நீரின்றி பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

செட்டிகுளம் பாவற்குளம் 6ஆம் யூனிட்டலை அண்டிய பகுதியிலுள்ள பொதுக்கிணற்றில் வறட்சியின் காரணமாக நீர் வற்றியுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரினைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பாவற்குளம் பகுதியில் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு நேற்று சென்றிருந்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த பொது கிணற்றிலேயே பல காலங்களாக குடிநீரைப் பெற்று வந்துள்ளதாகவும், வறட்சி காரணமாக தற்போது குடிநீர் வற்றி இருக்கும் பொதுக்கிணறினை ஆழப்படுத்தி தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், அந்த பகுதிக்கு குழாய் கிணறு ஒன்றினையும் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரியிருந்தனர்.

இதையடுத்து பொதுக்கிணற்றினை ஆழப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அப்பகுதியில் குழாய் கிணறு பெற அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் மாவட்ட திட்டப்பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் சிவசக்தி ஆனந்தன் வாக்குறுதியளித்துள்ளார்.

Comments