வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று காலை வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறவன்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன், பின்புறமாக வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதிகள் இருவருமே காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments