வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் பெருமளவான பகுதி சேதம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
28Shares

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்க பகுதியில் நோர்வூட் – கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயினால் சுமார் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் நேற்று மாலை(11) காட்டிற்கு தீமூட்டப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வனப் பகுதி தீக்கிரையாகியுள்ளது.

நீரேந்தும் பிரதேச காட்டுப்பகுதியில் இத்தீ ஏற்பட்டதன் காரணமாக நீருற்றுக்கள் அற்றுப் போகும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போது நீர்த்தேக்கங்களின் நீர் மற்றும் குறைந்து வரும் நிலையில் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் நீர்தேக்களுக்கு அண்டிய பகுதியிலும் நீரேந்தும் பிரதேசங்களிலும் இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதனால் எதிர்காலத்தில் நீர் மட்டம் மிக வெகுவாக குறைந்து மின் உற்பத்தியினையும் பாதிக்க கூடும்.

அண்மைக்காலமாக வரட்சியான காலநிலையின் போது காட்டுப் பகுதிகளுக்கு தீ வைப்பது அதிகரித்து வருகின்றது. மிருகங்களை வேட்டையாடுவதற்காகவே இவ்வாறு காடுகளுக்கு தீ வைக்கப்படுவதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Comments