நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அசமந்த போக்கு: மக்கள் விசனம்

Report Print Theesan in சமூகம்
57Shares

வவுனியா புகையிரத நிலைய வீதியில் கடந்த சில நாட்களாக விஸ்தரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் இவ்வீதியில் நீர்ப்பாசனத்துக்கான குழாய் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். நீர்ப்பாசன திணைக்களத்தினால் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக இவ்வீதியில் வைரவ புளியங்குளம் சந்தியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக பாரிய குழிகள் வெட்டப்பட்டு குழாய்கள் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இரண்டு மூன்று தினங்களாகியும் அப்பாரிய குழிகள் இதுவரையிலும் மூடப்படவில்லை. இதனால் அப்பகுதியில் காணப்படும் வர்த்தகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் வியாபாரம் தடைப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நீர்ப்பாசன பொறியியலாளர் ஒருவரைத் தொடர்பு கொண்ட போது அவர் அதை பொருட்படுத்தாத வகையில் பதிலளித்தார்.

Comments