ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு சீமெந்து பைக்கற்றுக்கள் கையளிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்
26Shares

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்து பைக்கற்றுக்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வை இன்று காலை(12) மத்திய மாகாண விவசாய மீன்பிடி கால்நடை, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாச்சார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வரும் ஆலயத்துக்கு சீமெந்து தேவைப்படுவதாக ஆலய பரிபாலனசபையினர் விடுத்த வேண்டுகோளினை அடுத்தே இந்த சீமெந்துப் பைக்கற்றுக்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் அருள்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெகதீஸ்வரன், உட்பட ஆலய பரிபாலன சபையினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Comments