தொடர்மாடி வீடுகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக பாரிய சுகாதார பிரச்சினைகள் உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் விஷம் தொடர்பான தகவல் மையத்தின் பிரதான வைத்தியர் வருண குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விற்பனை செய்யப்படும் நீர் குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் நீர் தாங்கிகள் தொடர்பில் கடுமையான ஆபத்துக்கள் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

நீர் மற்றும் உணவு பெற்றுக்கொள்ளும் போதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில் உடம்பில் ஏற்பட கூடிய பாதிப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இலங்கையில் தயாரித்து சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நீர் தாங்கிக்கான உரிய தரம் இல்லை எனவும், அதன் ஊடாக நீர் பயன்படுத்துபவர்களின் உடல் சுகாதாரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் நீர் தாங்கிகள் இரும்பில் செய்யப்பட்டவைகள் மற்றும் சீமெந்து பயன்பாட்டில் தயாரிக்கப்பட்டவைகளே பயன்படுத்தப்பட்டது.

எனினும் தற்போது பிளாஸ்டிக் ஊடாக நீர் தாங்கி தயாரிக்கப்படுகின்றது. அதன் தரம் குறிப்பிடாமையே பிரச்சினையாக காணப்படுகின்றது.

பொதுவாக இவ்வாறான நீர் தாங்கிகள் மூடப்பட்ட பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து சூரிய ஒளி படக்கூடாது.

அவ்வாறு சூரிய ஒளி படும் போது நீர் கொதித்துக் கொண்டிருக்கும். அந்த தாங்கியில் உள்ள பிளாஸ்டிக் இரசாயன விஷம் நீருடன் கலக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நகர்புறங்களில் உள்ள தொடர்மாடிக் கட்டடங்களில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் முறையிலான நீர்தாங்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments