குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்
88Shares

ஹட்டன் திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப் பகுதியில் நேற்று(11) குளவி கொட்டுக்கு இலக்காகிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆறுமுகம்(68) எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, குறித்த நபர் உறவினர் வீட்டுக்கு சென்ற வழியில் மரத்திலே இருந்த குளவி கூடு கலைந்தமையால் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments