மத்திய மலைநாட்டில் கடந்த மாதங்களாக கடும் வறட்சி நிலை நிலவி வருகிறது.
இந்த கடுமையான வறட்சி காரணமாக மஸ்கெலியா, மவுஸாகளையின் நீர் மட்டம் மிகவும் விரைவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து நீரில் மூழ்கியிருந்த பழைய மஸ்கெலிய நகரில் பௌத்த விகாரையின் புத்தர் சிலை, ஸ்ரீ கதிரேஷன் இந்து கோவில், கற்பாலம், முஸ்லிம் பள்ளவாசல் மற்றும் தேவி கோவில்கள் என்பன வெளியே தெரிகின்றன.
மவுஸாகளை மற்றும் காஸல்ட்ரி ஆகியவைகளின் நீர் மட்டம் இன்று 10.00 மணியளவில் 35 அடியில் இருந்து 18.05 அடி வரை குறைவடைந்துள்ளதாகவும், லக்ஷபான நீர்மின்சார தொகுதியின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேசிய நீர் மின் கட்டத்திற்கு சொந்தமானமான, லக்ஷபாய நீர் மின் உற்பத்தி நிலையம் லக்ஷபான, பொல்பிட்டி, விமலசுரேந்திர மற்றும் கெனியோன் ஆகிய நீர் மின்சார நிலையங்கள் ஐந்திற்கும் பிரதான நீர் வழங்கு நீர்த்தேங்கங்களா மவுஸாகளை மற்றும் காஸல்ட்ரீ நீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.