முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 128 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் மூலம் 26 இலட்சத்து 47 ஆயிரத்து 700 ரூபாய் தண்டப் பணமாக அறவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மது போதையில் வாகம் செலுத்திச் சென்ற 128 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் மூலமே 26 இலட்சத்து 47 ஆயிரத்து 700 ரூபாய் தண்டப் பணமாக அறவிடப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டை விட 2016ஆம் ஆண்டிலே அதிகளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 2015ஆம் ஆண்டு மது போதையில் வாகனம் செலுத்தியோரின் எண்ணிக்கை 55 பேருக் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் 2016ஆம் ஆண்டு மது போதையில் வாகனம் செலுத்தியோரின் எண்ணிக்கை 73 பேரினால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் 2016ஆம் ஆண்டு வீதி விபத்துக்களின் மூலம் மூன்று பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.