மட்டு. சந்திவெளியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டுத் தளபாடங்கள் முற்றாக நாசம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சந்திவெளிப் பிரதேசத்தில் நேற்று(11) மாலை இடம்பெற்ற தீ விபத்தில் வீட்டின் சமையலறை முற்றாக சேதமடைந்ததுடன் அங்கிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனப் பொலிஸார் கூறினர். மின் ஒழுக்கினால் தீ ஏற்பட்டுள்ளதா என அறிவதற்கு மின்சாரசபை பொறியியலாளர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

சந்திவெளி கண்ணகி அம்மன் வீதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் வர்த்தக நிலையத்திற்குச் சென்றிருந்த வேளை வீட்டின் சமையலறை கூரையிலிருந்து புகை வருவதை அவதானித்த அயல் வீட்டார் சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து இராணுவத்தினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments