வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் இறுதி நாள் நிகழ்வு நேற்று(11) வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது அணி நடை, உடல் பயிற்சி கண்காட்சி, ஓட்டப் போட்டி உட்பட்ட பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
அத்தோடு விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் க.பரமானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, வாழைச்சேனை கோறளைப்பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் நா.குணலிங்கம், கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.