நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்: மட்டு எல்லையில் தமிழர்களின் அவல நிலை

Report Print Reeron Reeron in சமூகம்
55Shares

கடந்த வருடம் மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றம், தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதை அறிந்து குறித்த இடத்திற்கு நேரடியாக பார்வையிட சென்ற மட்டு அரசாங்க அதிபரின் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்றால் கேள்விக் குறியாகவே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

பிக்குமார்களினால் தாக்கப்பட்ட தமிழ் பண்ணையாளர்களை இன்று சந்தித்து அவர்களிடத்தில் சம்பவத்தை கேட்டறிந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதி, மாவட்டத்தின் எல்லை என அடையாளப்படுத்தியதான பெயர் பலகையை இடுவதற்கு வாக்குறுதி கொடுத்தும் அந்த கருமங்கள் நடைபெறவில்லை.

குறித்த மயிலத்தமடு, மாதவணைக்குரிய பிரதான பாதையை சீர் திருத்துவதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டும் கிடப்பில் கிடக்கின்றது.

தமிழ் பண்ணையாளர்களுக்குரிய கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுப்பதற்குரிய குளம் ஒன்று இருந்தும் அதனை சீரமைத்து தரும்படி கேட்டும் இதுவரைக்கும் குறித்த விடயம் நடைபெறவில்லை. குறித்த குளம் உடனடியாக சீர் செய்து கொடுக்கப்பட்ட வேண்டும்.

குறித்த மயித்தமடு, மாதவணை பகுதியானது இரண்டு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிக்குட்பட்டது. ஆனால் எந்த ஒரு பிரதேச சபையும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுத்தாக தெரியவில்லை.

பொலிஸ் சாவடி அமைத்து பண்ணையாளர்களிடையே ஏற்படும் பிரச்சினையை கண்ணோக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் நடைபெறவில்லை.

ஆனால் அண்மித்த காலத்தில் கரடியனாறு பிரதேசத்தில் அத்துமீறிய பிக்கு கைது செய்யப்படவில்லை.

குறித்த பகுதி தொல்பொருள் பகுதி என 24 மணித்தியாலமும் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தியிருக்கின்றார்கள்.

ஆனால் மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் இரண்டு தமிழ், சிங்கள சமூகங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படுத்தல், தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு உள்ளாதால், கால் நடை கடத்தப்படுதல், நிலங்களை சிங்கள மக்கள் அத்துமீறி பிடித்தல், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையிலுள்ள காடுகள் அழிக்கப்படுதல், சட்டவிரோத மண் அகழ்வு போன்ற செயற்பாடுகள் தெடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற வேளையில் மாவட்ட செயலாளர் கொடுத்த வாக்குறுதிகள் கிடப்பில் கிடப்பதாக அவர் தெரிவித்தார்.

Comments