யாழின் பல்வேறு பகுதிகளிலும் களைகட்ட ஆரம்பித்துள்ள தைப்பொங்கல் வியாபாரம்

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ் குடாநாட்டில் தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று(12) அதிகாலை 5 மணி முதல் பல்வேறு பகுதிகளிலும் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். நகர் மற்றும் அதனை அண்டியுள்ள வியாபார நிலையங்கள், குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், சுன்னாகம், மருதனார் மடம், சங்கானை பொதுச் சந்தைகள் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து மிகவும் ஆர்வத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கலுக்குத் தேவையான பானைகள், அகப்பைகள், அரிசி, கரும்பு, பழ வகைகள், புத்தாடைகள், வெடி பொருட்கள் மற்றும் இதர பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பொங்கல் வியாபாரம் ஆரம்பித்து தற்போது முதல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தைப்பொங்கல் திருநாளுக்கு முதல் நாளான நாளைய தினம் மேலும் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ் குடாநாட்டிலுள்ள பொதுச் சந்தைகள் மற்றும் வியாபார நிலையங்களில் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் பொங்கல் வியாபாரம் ஆரம்பித்து மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments