வெளிநாட்டவர்களுக்கு அரிய வகை உயிரினங்களை விற்பனை செய்த நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
128Shares

இலங்கைக்கே உரித்தான பாம்புகளையும் இன்னும் பல வகையான பாம்புகள் மற்றும் அரிய வகை உயிரினங்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் விசேட தேடுதல் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிகம, உடுகாவ பிரதேசத்தில் வெளிநாட்டவர்களுக்கு பாம்புகளை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நபர் சிங்கராஜ வனம் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிடித்த பாம்புகளை எடுத்து வந்து இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிரிஸ்ஸ சுற்றுலா பிரதேசத்திற்கு வரும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து இந்த வியாபாரத்தை சந்தேக நபர் மேற்கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அரிய வகை சிறுத்தை சிலந்தி போன்ற உயிரினங்கள் மற்றும் பாம்புகளை சந்தேக நபர் விற்பனை செய்துகொண்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments