நல்லூர் பிரதேசசபைக்குப் புதிய செயலாளர் நியமனம்

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ்.நல்லூர் பிரதேச சபையின் செயலாளராக இளவாலையைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் சுதர்ஜன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் செயலாளராக இதுவரை பதவி வகித்து வந்த தி.அன்னலிங்கம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள நிலையில் புதிய செயலாளர் கடந்த-02ஆம் திகதி முதல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த-2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2016 டிசம்பர் மாதம் வரை ஊர்காவற்துறையின் பிரதேச செயலாளராக இருந்து வந்த சுந்தரேஸ்வரன் சுதர்ஜன் யாழ். மாநகர சபை, மானிப்பாய்ப் பிரதேச சபை என்பவற்றில் முகாமைத்துவ உதவியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

Comments