கணவனைக் கொன்ற இலங்கைப் பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம்

Report Print Ramya in சமூகம்
2252Shares

மேற்கு அவுஸ்திரேலியாவில் தனது கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சாமரி லியனகே, தனது சிறைத் தண்டனை நிறைவடைந்த பின்னர் தன்னை நாடு கடத்த வேண்டாம் என அந்நாட்டு குடிவரவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த பெண் மருத்துவர்சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் அவரது கணவனை , கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்திருந்தார்.

இருப்பினும் ரத்துச் செய்யப்பட்டிருந்த சாமரி லியனகேயின் விசாவை மீள புதுப்பித்து தருவதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தனது பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, தன்னை நாடு கடத்த வேண்டாம் என குடிவரவு அமைச்சரிடம் சாமரி லியனகே கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே விசா தொடர்பில் மீளாய்வு மேற்கொண்டு சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சாமரி லியனகேயின் கணவர் டினேந்திரா அத்துகோரளையும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments