வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு மனம் நோகாதபடி தீர்வு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
72Shares

வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதியின் பின்னர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், கடமை நிறைவேற்று அதிபர்கள் மனம் நோகாதபடி தீர்வு காணப்படும் என வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 82ம் அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டள்ளது.

நேற்று முன்தினமும் கடமை நிறைவேற்று அதிபர்கள் தமக்கு நீதி வழங்ககோரி வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் சுட்டிக்காட்டியிருந் ததுடன், கடமை நிறைவேற்று அதிபர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மாகாண சுகாதார அமைச்சர்,

தற்சமயம் கல்வி அமைச்சர் நாட்டில் இல்லாத நிலையில் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக தீர்மானத்தை எடுப்பது பொருத்தமற்ற ஒன்றாகும்.

எனவே கல்வி அமைச்சர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்பிய பின்னர் கல்வி அமைச்சர் , கல்வி அமைச்சருடன் திணைக்கள தலைவர்கள் மற்றும் இதர அமைச்சர்கள், கடமை நிறைவேற்று அதிபர்கள் அகியோர் கூடி பேசுவதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணலாம்.

மேலும் இதன் போது காணப்படும் தீர்வு கடமை நிறைவேற்று அதிபர்களின் மனம் நோகாதபடி காணப்படும்.

அதேபோல் அதிபர் போட்டி பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனங்களை வழங்கி கொண்டு கடமை நிறைவேற்று அதிபர்களை வெளியில் விட முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பட்டதாரிகளை ஆசிரியர் நேர்முகத் தேர்வு! உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிப்பு

வடமாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வை பிற்போடுமாறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோதும், திட்டமிட்டபடி நேர்முகத்தேர்வு நடைபெறும் என சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளதுடன், குறித்த நியமனத்தில் உள் ள குறைபாடுகள் தொடர்பாக உரிய தரப்பிடம் சுட்டிக்காட்டப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 82ம் அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றிருந்தது.

இதன்போதே மேற் படி விடயம் பேசப்பட்டுள்ளது. பட்டதாரி மாணவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான போட்டி பரீட்சை நடத்தப்பட்டுள்ளதுடன், நேர்முக தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்ப ட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி பரீட்சையில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், குறிப்பாக மாகாணத்தின் மொத்த ஆசிரியர் தேவைக்கு குறைவான மாணர்வகே போட்டி பரீட்சையி ல் சித்தியடைந்திருக்கும் நிலையில் மீதமானவர்கள் எப்படி தெரிவு செய்யப்படவுள்ளனர்? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் சில உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பட்டதாரிகள் பரீட்சை எழுதி சித்தியடைந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்று நேர்முகதேர்வு நடக்கவுள்ள நிலையிலேயே எம்மில் சிலருக்கு சந்தேகங்கள் வருகின்றது என சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் மேற்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முக தேர்வை ரத்து செய்யவேண்டு ம் எனவும் பிற்போடவேண்டும் எனவும் சபையில் உறுப்பினர்கள் சிலர் கேட்டு கொண்டனர்.

இந்நிலையில் கல்வி அமைச்சர் நாட்டில் இல்லாத நிலையில் அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாது என பதில் கல்வி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சபையில் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து நேர்முக தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என தீர்மானிக்கப்பட்டதுடன்,

நியமனம் வழங்குவதை தாமதப்படுத்தி உறுப்பினர்கள் முன்வைத்திருக்கும் சில குறைபாடுகள் தொடர்பாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments