யாழில் அனர்த்த ஆபத்துக்களை தடுக்க 10 திட்டங்கள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
87Shares

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 3 ஆண்டுகளில் அனர்த்த ஆபத்துக்களை தடுப்பதற்காக 426 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்துவதற்கு 10 திட்டங்கள் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வருட திட்டங்களுக்காக 181 மில்லியன் ரூபாவுக்கானதும், 2018 ஆம் ஆண்டின் திட்டங்களுக்காக 145 மில்லியன் ரூபாவுக்கானதும், 2019 ஆம் ஆண்டு 100 மில்லியன் ரூபாவுக்கானதுமான திட்டங்களே அடையாளப்படுத்தப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி 3 வருடங்களுக்கும் நெடுந்தீவு பிரதேச செயலகர் பிரிவில் உள்ள குளப் திருத்தத்திற்காக 20 மில்லியன் ரூபாவும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள மூழ்கடிப்பு பகுதிகள், வடிகால்கள் மற்றும் மதகுகள் அமைப்பதற்கு 45 மில்லியன் ரூபாவும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கொத்தலாவள வாக்கால் மீளமைத்தலுக்கு 60 மில்லியன் ரூபாவும் தேவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மருதங்கேணி பிரதேச செலர் பிரிவில் மாவிலங்கை உடுத்துறை அபாய வெளியேற்றுப்பாதை அமைத்தலுக்காக தொடர்ந்து 2 வருடங்களுக்கு 55 மில்லியன் ரூபாவும் தேவை என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், 3 வருடங்களுக்கும் யாழ்ப்பாணத்திற்கு பொதுவான திட்டங்களாக யாழ்.மாவட்டத்தில் அதிகூடிய வறட்சியால் பாதிக்கப்படும் கிராமங்களுக்கான வறட்சி தணிப்பு செயற்றிட்டங்களுக்கு 75 மில்லியன் ரூபாவும்,

வெள்ளத்தணிப்பு செயற்றிட்டங்களுக்கு 90 மில்லியன் ரூபாவும் மற்றும் இடி, மின்னல் அனர்த்த பாதிப்புக்களின் நெருக்கதலை தடுக்கும் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்த 20 மில்லியன் ரூபா நிதியும் தேவை என்றும் திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளன.

Comments