யாழில். மதுபான சாலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் பூட்டு

Report Print Vino in சமூகம்
198Shares

தைப்பொங்கல் பண்டிகையானது நாளை மறுதினம் சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தினை முன்னிட்டு மதுபான சாலைகளையும் மூடுவதற்கு மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மேலும் பண்டிகையினை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு விடுமுறை வழங்குமாறும், அதற்கு பதிலாக எதிர்வரும் 21 ஆம் திகதியை பாடசாலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments