உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைத்தலைவர் அருணாசலம் சத்தியானந்தம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழர் பாரம்பரியத்தை சித்தரிக்கின்ற வரவேற்பு நடனம், உழவர் நடனம், நடன ஆற்றுகை, வாழையடி வாழையாக வந்த நம் தமிழர் பண்பாடு பேணப்படுகின்றதா? பேணப்படவில்லையா? என்னும் சிறப்பு பட்டிமன்றம், செற்பொழிவுகள் போன்ற பல கலை நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.