போரதீவுப்பற்றுக்கான சிவில் அமைப்பு உதயம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான சிவில் அமைப்பு இன்று(12) உருவாக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளியில் அமைந்துள்ள பொதுக்கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்திலே இவ்வமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக ஊடகவியலாளர் வ.சக்திவேல், பிரதித் தலைவராக மேலதிக மாவட்ட பதிவாளர் அ.பேரின்பநாயகம், இணைத் தலைவர்களாக அதிபர் சி.சிவபாதம், அதிபர் த.திருவருட்செல்வன், செயலாளராக சமாதான நீதவான் தெ.சிவபாதம்,பொருளாளராக, சமூக வலுவூட்டாளராக கு.ஜதீஸ்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதில் இணைச் செயலார்களாக வெளிக்கள உத்தியோகஸ்தர் அ.தயாபரன், மற்றும், சு.கோகிலாதேவியும், செயற்பாட்டுக்குழுத் தலைவர்களாக, முகாமைத்துவ உதவியாளர் மு.பேரின்பராசாவும், ஆசிரியர் இ.கோணேஸ்வரனும், இவ்வமைப்பின் இணைப்பளராக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வ.வேதநாயகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் மேலும் 16 பேர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அமைப்பின் ஆலோசகர்களாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர், வெல்லாவெளி பொதுசுகாரா வைத்திய அதிகாரி, போரதீவுப்பற்று பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி, பிரதேச சபைச் செயலாளர், களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர், ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போரதீவுப்பற்று பிரதேசத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி பற்றி இந்த சிவில் அமைப்பு செயற்படவுள்ளது என இவ்வமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments