செட்டிகுளம் - துட்டுவாகை பகுதியில் வீரமாணிக்கன்குளம் திருமகள் வித்தியாலயம் எனும் புதிய பாடசாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் க.கோமளேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர், செட்டிகுளம் கோட்டக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
மேலும், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இந்த பாடசாலையின் வேலி அமைப்பிற்காக ஏற்கனவே இந்த வருடத்திற்கான தனது நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த பாடசாலைக்கு தேவையான மேலதிக வளங்களை கல்வி அமைச்சருடன் பேசி பெற்றுக்கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.