கதிரவெளியில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா: கேள்விக்குறியாகும் தமிழர் கலாச்சாரம்!

Report Print Reeron Reeron in சமூகம்
245Shares

எதிர்வரும் தைத் திருநாளை வரவேற்கும் முகமாக 'The Leaders' அமைப்பின் ஏற்பாட்டில் 'இன ஒற்றுமையை வளர்க்க இளையோர் நாம் கொண்டாடும்' எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று (12) கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் சி.ராகுலநாயகி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், ஐக்கிய நாடுகளின் மட்டக்களப்பு அவிபிருத்தி நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர், மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் செல்வரெட்ணம் ஜெயபாலன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட பகுதிகளில் 'The Leaders' அமைப்பில் அங்கம்வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை நடாத்தியிருந்தனர்.

அத்துடன், இந்த பொங்கல் விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச அதிபர் பி.எஸ்.எம்.சால்ஸ் உட்பட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பு அதிதிகள் தலைமை என அழைப்பிதழில் அழைத்தும் குறித்த நிகழ்வுக்கு சமூகம் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொங்கல் விழாவினை ஏற்பாடு செய்திருந்த அமைப்பினர் பொங்கல் விழாவினை பொங்கல் கலாச்சார முறையில் கலாச்சாரமாக செய்தார்களா? வருகை தந்த அதிதிகளும் அதனைக் கடைப்பிடித்தார்களா? என்பது கேள்விக்குறியான விடயமாக நடைபெற்றது.

கலாச்சாரமாக பூவும், பெட்டும் மங்களகரமாக நிறைந்திருந்த பொங்கல் பானைக்குரிய வேலைகளையும் பாதனி கழற்றாமல் ஏற்பாட்டாளர்கள் உட்பட ஒரு சில அதிதிகள் என கலந்துக்கொண்டு பொங்கல் பானைக்கு முதல் அரிசி போட்டதில் இருந்து அனைத்து வேலைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட பால்சேனை பாடசாலையின் அதிபர் பொன்.ராமச்சந்திரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழர்களின் கலாச்சாரம் பாரம்பரியம் சீரழிந்து செல்கின்றது, யார் எதிர்காலத்தில் தமிழர் கலாச்சாரத்தை கடைப்பிடிப்பது என வாய்கிழிய பேசுவர்கள் முதலில் கலாச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யும்போது அனைத்தையும் நிகழ்வுக்கு ஏற்ப கொண்டு செல்லப்படுவது முக்கியமானது.

ஒரு கலாச்சார நிகழ்வில் தான் அந்த அந்த இனத்தின், மதத்தின், சமயத்தின் கலாச்சாரம் உட்பட பாரம்பரியங்களை ஏனையவர்களுக்குச் கொண்டு செல்லும் ஊடகமாக அமையும்.

அதனை விடுத்து கலாச்சார நிகழ்வு என ஏற்பாடு செய்யப்பட்டு இவ்வாறான விடயங்கள் எந்த காலாச்சார நிகழ்வுகளிலும் இடம்பெறாமல் கவனம் செலுத்துவது ஏற்பாட்டளர்களின் கடமையாகும்.

ஒழுங்கமைப்புச் செய்த அமைப்பினர் முன்கூட்டியே குறித்த பொங்கல் நிகழ்வுகளை தயார் செய்திருக்கலாம். பிரதேச மட்ட விவசாயிகளையும் அழைத்து நடாத்தியிருக்கலாம்.

இன ஒற்றுமையை வலியிறுத்துகின்ற இந்நிகழ்வில் மத,மொழி, கலாச்சாரம் சார்ந்தவர்களையும் நடாத்தியிருக்கலாம்.

மேலும், அதற்கு அப்பாலும் உரியவர்கள் அழைக்கப்பட்டிருந்தால் குறித்த நிகழ்வு சிறப்பாக அமைந்திருக்கும் என பால்சேனை பாடசாலையின் அதிபர் பொன்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments