மட்டக்களப்பில் நுளம்பு பெருகும் இடத்தை வைத்திருந்த 12பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Report Print Kumar in சமூகம்
77Shares

மட்டக்களப்பு - கோட்டமுனைப் பகுதியில் நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 12பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் பெருக்கம் அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு உள்ள பகுதியாக மட்டக்களப்பு மாநகரசபை பகுதிகளில் தெரிவு செய்யப்பட கோட்டமுனை பொதுசுகாதார பிரிவில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும், மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து டெங்கு ஒழிப்பு பணிகள் நேற்று(11) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 210 வீடுகள் மற்றும் அதனை அண்டிய இடங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் நுளம்புகள் பரவக்கூடிய வகையில் காணப்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக இப்பகுதியில் 12 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் கூறியுள்ளார்.

இதன் போது, டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சூழலை வைத்திருந்தவர்கள் 27 பேருக்கு எச்சரிக்கை அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் மற்றும் 12 பேருக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, இப்பகுதியில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான புகை விசுரும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த சோதனை நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments