யுத்த காலத்தில் காணாமல் போன தமிழர்கள் உயிரோடு உள்ளனர்..!

Report Print Vino in சமூகம்

யுத்த காலத்தில் காணாமல் போன தமிழர்கள் உயிரோடு இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தனபாலசிங்கம் புஸ்பாம்பாள் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழர்களை அடக்கி ஆழ நினைத்ததாலேயே தமிழ் இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்க நேரிட்டது எனவும் அவ்வாறு போராட்டத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான பல தகவல்களை அவர்களது உறவினர்கள் அறிந்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

யுத்த காலத்தில் காணாமல் போன தமிழர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடாத ஆட்சியாளர்கள், தமது கைகளால் அரச படையினரிடம் கையளித்த பிள்ளைகள் தற்போது எங்கு இருக்கின்றார்கள் என்ற விடயத்தை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments