யாழ்.மாவட்டக் கலாச்சார அதிகார சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு

Report Print Thamilin Tholan in சமூகம்
37Shares

யாழ்.மாவட்டக் கலாச்சார அதிகார சபையின் அங்குரார்ப்பண நிகழ்வும், கலந்துரையாடலும் இன்று(12) முற்பகல் 10 மணி முதல் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது யாழ். மாவட்டக் கலாச்சார அதிகார சபையின் தலைவராக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சமூக விரோத செயற்பாடுகள், மற்றும் எமது கலை, கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் 2017ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாகத் துறைசார்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களையும் சேர்ந்த செயலாளர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், யாழ்.மாவட்டக் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments