ஐக்கியத் தேசியக் கட்சியின் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜீத் பிரமதாசவின் 50 ஆவது ஆண்டு பிறந்த தினம் இன்று(12) மட்டக்களப்பு கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளர் வே.மகேஸ்வரன் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது கேக் வெட்டப்பட்டதுடன், கட்சியில் புதிய அங்கத்தவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டனர் மேலும் மரக் கன்றுகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.