வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்து பூவரசன்குளம் ஊடாக செட்டிகுளம் மெனிக்பாம் செல்லும் பயணிகள் பேருந்து இன்றி பெரும் சிரமத்துக்குள்ளகியுள்ளனர்.
இரவு 7 மணிக்கு குறித்த வழியாக இறுதியாக செல்லும் பேருந்தில் போதியளவு இடவசதி இல்லாததினால் பலர் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருக்க நேரிட்டது.
மேலும் இறுதியாக சென்ற பேருந்து பயணத்தினை மேற்கொண்டதும் குருமன்காடு பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் பெருமளவானவர்கள் பேருந்தில் ஏற முற்பட்டனர். அத்துடன் சில இளைஞர்கள் பேருந்தின் மீது ஏறியும் பயணம் மேற்கொள்ள முற்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வவுனியா இ.போ.சபைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மேலும் இரு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
இன்று விடுமுறை நாள் என்பதால் தனியார் பேருந்துகள் சில கடமைக்குச் செல்லவில்லை. இதன் காரணமாகவே பயணிகள் பலர் இ.போ.ச பேருந்துக்கு காத்திருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.