வடக்கில் தமிழ் தெரிந்த பொலிஸாரின் தேவை அவசியம்!

Report Print Vino in சமூகம்
108Shares

வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணிபுரிவதற்கு தமிழ் தெரிந்த பெண் பொலிஸார் தேவை என்று யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சிவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

தமிழ் தெரிந்த பெண் பொலிஸாருடைய தேவை உள்ள போதும் வடக்கில் உள்ள தமிழ் பெண்கள் பொலிஸ் வேலையை தெரிவு செய்வது குறைவு என்றும் அவர் மேலும் கூறினார்.

வடக்கில் தற்போது தமிழ் தெரிந்த பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுள்ள போதும், போதுமான எண்ணிக்கியினை எட்டவில்லை என்றார்.

பொலிஸாருக்கு தற்போது பெண் பொலிஸ் உதவி அவசியமாக இருக்கின்றது. ஆனால் வடக்கில் உள்ள தமிழ் பெண்கள் அதற்கு விண்ணப்பிக்க தவறுகின்றனர்.

இதன் காரணமாகவே வடக்கில் தமிழ் தெரிந்த பெண் பொலிஸார் அதிகளவில் கடமைக்கு அமர்த முடியாமைக்கு கரணம் என அவர் தெரிவித்தார்.

Comments