புறா மூலம் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கைது ?

Report Print Kamel Kamel in சமூகம்
101Shares

புறாக்கள் மூலம் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொட்டாதெனிய - குளிகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் நீண்ட காலமாக நடத்திச் சென்ற ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கையை கொட்டாதெனிய பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

நேற்றைய தினம் இந்தப் பெண்ணின் வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். போதைப் பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைக்கு லானா என்னும் பொலிஸ் மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து இரண்டு கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் 62 வயதான பெண் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார். இந்தப் பெண் உள்ளாடைகளில் மறைத்து வைத்து போதைப் பொருளை கடத்தியுள்ளார்.

இந்தப் பெண்ணின் இரண்டு மகன்கள் ஏற்கனவே போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புறாக்களின் ஊடாகவே போதைப் பொருள் கடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments