தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜயமுனி சோமரட்ன தலைமையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பொங்கல் நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸார் எனப் பலரும் கலந்து பொங்கல் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதன்போது, பொலிஸ் நிலைய வளாகத்தில் பொங்கி வீதியால் சென்ற பொது மக்கள் மற்றும் வாகனங்களை மறித்து பொங்கல் சாதங்களை வழங்கி தமது தைத்திருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.