உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று(14) உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னாரில் அமைதியான முறையில் தைப்பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றது.
மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றதோடு இந்து ஆலயங்களிலும் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவனுக்கு நன்றி செலுத்தப்பட்டது.
மேலும் மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்ற வற்றிலும் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற விசேட பொங்கல் நிகழ்வு
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் மன்னார் சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தில் விசேட பொங்கல் விழா நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்; எஸ்.ஏ.உதயன் தலைமையில் இடம் பெற்ற பொங்கல் விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் மற்றும் சர்வமதத்தலைவர்கள், தமிழ்ச்சங்கத்தின் பிரதிநிதிகள்,எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது விசேட பொங்கல் விழா நிகழ்வினை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் அங்கு இடம் பெற்றமை குறிப்பிடத்தகக்து.