மட்டக்களப்பில் மக்கள் பிரதிநிதிகளின் பொங்கல் வாழ்த்துச் செய்திகள்

Report Print Reeron Reeron in சமூகம்
21Shares

சித்திரைப் புத்தாண்டுக்குள் வடகிழக்கு மக்களின் ஏகோபித்த கோரிக்கைகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டுமென இறைவனை வழிபட்டு இன்றைய தினம் மலர்ந்துள்ள தைத்திரு நாளை கொண்டாடுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தை திருநாளை முன்னிட்டு லங்காசிறி சேவைக்கு இன்று(14) வழங்கிய விசேட வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளாருமாகிய கி.துரைராஜாசிங்கத்தின் வாழ்த்துச் செய்தியில், “தை திருநாள் தமிழர்களின் புதுவருடமாக கணிக்கப்பட்ட வரலாற்றுச் சான்று, இருந்த போதும் சித்திரை வருடப் பிறப்பைதான் தமிழர்களின் புதுவருடமாக கொண்டுகின்றோம். எதிர் காலத்தில் தமிழர்களின் புதுவருடமாக தை திருநாளை புதுப்பிக்க வேண்டும் என்ற ஆதங்கம் அனைத்து தமிழ் இந்து மக்களிடையே உள்ளது.

வருங்காலங்களில் தை திருநாளை தமிழர்களின் புதுவருடமாக கொண்டாட அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் ஏற்படுத்துவோம் என நினைக்கின்றோம். 'தை பிறந்தாள் வழி பிறக்கும்' என்பதற்கு ஏற்ப 2015 ஆம் ஆண்டு தை மாத்திலே இடம்பெற்றதான ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் ஒரு சிறிய ஒளிக்கீற்றைக் காட்டியிருக்கின்றது. அதனடிப்படையில் பயணிப்போம், அனைத்து தமிழ் இந்து மக்கள் அனைவருக்கும் தை திரு நாள் வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.துரைரெட்ணம் தனது தை திருநாள் வாழ்த்துச் செய்தியில், “இலங்கை வாழ் தமிழ் இந்து மக்கள் அனைவருக்கும் தித்திக்கும் தை திருநாளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

2016 ஆம் ஆண்டு ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் வடகிழக்கு தமிழ் மக்கள் தீர்வுத் திட்டத்தை நோக்கியதான 2017 ஆம் ஆண்டுக்குரிய தை திருநாள் அமையும். ஆனால் இன்றைய தை திருநாளில் எமது மக்களின் வேண்டுதல்கள் எண்ணங்கள் அனைத்தும் தொக்கி நிற்கின்றது” என தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரத்தின் தை திருநாள் வாழ்த்துச் செய்தியில், “ஈழத்தில் தை திருநாளை கொண்டாடும் அனைத்து எமது தமிழ் இந்து உறவுகள் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் இரா.சம்பந்தன் 2016 க்குள் தீர்வு கிடைக்குமென பல மேடைகளில் கூறியிருந்தும் 2017 ஆம் ஆண்டு வரை நீடித்து எமது வடகிழக்கு தமிழ் உறவுகளின் கோரிக்கைகள் கேள்விக் குறியாக உள்ளது.

இரா.சம்பந்தன் மாத்திரம் வாக்குறுதி கொடுக்கவில்லை. பல தமிழ் தலைவர்கள் நாட்டின் ஆட்சியாளர்களின் போக்கை வைத்து தமிழ் மக்களுக்கான ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குறுதிகளை கொடுத்து இருக்கின்றார்கள்.

2017 ஆம் வருடத்திற்குள் ஸ்ரீலங்கா அரசிடம் ஒரு இறுதியான தீர்வுக்கான கோரிக்கையை எமது தமிழ் தலைமைகள் முன்வைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Comments