தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய அகதிகளுடன் கலந்துரையாடல்

Report Print Mohan Mohan in சமூகம்
59Shares

தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று முல்லைத்தீவில் நேற்று(13) நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதன்போது வீட்டுத் திட்டங்கள் வழங்குவது மற்றும் வாழ்வாதர உதவிகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்தியாவில் பிறந்தவர் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களை இலங்கைப் பிறப்புப் பதிவிற்கு மாற்றுவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் போது, “கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலப் பகுதிக்குள் சுமார் 10,000 பேர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்” என ஈழ அகதிகள் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் எஸ்.சீ.சந்திரஹாசன் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Comments