யாழில் விமர்சையாக கொண்டாடப்படும் தைத் திருநாள் பண்டிகை

Report Print Thamilin Tholan in சமூகம்
83Shares

யாழ்.குடாநாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (14) களை கட்டியுள்ளது.

இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் நீராடி ,புத்தாடை அணிந்து தத்தமது இல்லங்களின் முன்பாகப் பொங்கல் செய்து சூரிய பகவானுக்குப் படைத்து மெய்யுருக வழிபட்டு வருகிறார்கள்.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் உட்பட அனைத்துச் சைவ ஆலயங்களிலும் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகிறது.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் முருகப்பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்றுக் கொண்டனர்.

உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் ஆகியோருக்குப் பொங்கிய பொங்கலைப் பரிமாறி கிராமத்து மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுச் சத்தங்களோடு சேர்த்து தைப்பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments