வவுனியா மாணவன் மன்னாரில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Report Print Theesan in சமூகம்
348Shares

வவுனியா மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த 18 வயதான விநோத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் மன்னாரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து உயர்தரத்தில் கல்வி கற்றுவந்தார் என தெரியவருகின்றது.

இதன்போது ஏற்பட்ட காதல் முறிவினால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments