சித்தாண்டி இலுக்குப்பொத்தானை கிராமத்தில் இடம்பெற்ற தைப் பொங்கல் வழிபாடு

Report Print Reeron Reeron in சமூகம்
78Shares

தைத் திருநாளாம் உழவர் திருநாளை சித்தாண்டி இலுக்குப்பொத்தானை கிராமத்து மக்கள் பல்வேறுபட்ட ஏக்கத்துடன் இம்முறை தைப்பொங்கல் தினத்தை கொண்டாடினர்.

ஈரளக்குள கிராமத்திலுள்ள குடிமக்கள் பல்வேறுபட்ட கஷ்டத்தின் மத்தியில் தைப்பொங்கல் வழிபாட்டுக்குரிய கலாச்சாரத்துடன் தைத் திருநாளை கொண்டாடுகின்றனர்.

ஒரு சில குடியிருப்புக்களில் மாத்திரம் இன்றைய தின பொங்கலுக்குரிய அடுப்புக்கள் எரிந்தமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

முற்று முழுதாக மாரிகால வேளாண்மைச் செய்கை, மேட்டு நிலப் பயிர் செய்கையை நம்பி வாழும் வேரம், இலுக்குப்பொத்தாணை, பெருமாவெளி, பெரியவட்டவான், ஈரளக்குளம் போன்ற பல கிராம மக்களை இம்முறை ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து தொழில் செய்கையும் பாதிக்கப்பட்ட நிலையில் வேளாண்மை செய்த வயல்களை பார்த்த வண்ணம் ஏக்கத்துடன் வழிபாடுகளில் ஈடுபட்டதைக் காணக் கூடியதாக உள்ளது.

இலுக்குப்பொத்தானை வசிக்கும் தனது கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் காட்டில் விறகு எடுத்து விற்று அன்றாட சீவனோபாயத்தை நடாத்தி வரும் பெண்ணொருவர் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் எங்கள் வாடிகளில் மேட்டு நிலப் பயிர் செய்கை செய்து அதில் வருகின்ற தானியங்களைக் கொண்டு தைப் பொங்கல் பானைக்கு இட்டு பொங்கல் செய்வோம்.

ஆனால் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது வறட்சி எங்களை வாட்டுகின்றது. அதனால் இம்முறை எங்களைப் போன்ற கிராமத்து வயல் பகுதிகளில் இருக்கும் கிராமத்து மக்களுக்கு ஏக்கத்துடன் கூடியதான தைத் திருநாளாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Comments