போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமது தீரத துயரங்களை நான்கு சுவருக்குள் மறைத்து நிற்கின்றனர்.
அதிலும் குறிப்பாக அங்கவீனமாக்கப்பட்டவர்களின் நிலை சொல்ல முடியாத சோகம்.
இந்த நிலையில் அவர்கள் பொரும்பாலும பண்டிகை நாட்களில் வெளியே வருகின்றார்கள். சமூகத்துடன் தாமும் இணைந்து கொள்கின்றனர்.
இதற்காக பண்டிகை நாட்கள் தொடர்ந்து வருமா என்னும் ஏக்கம் பொதுமக்களிடையே காணப்படுகின்றது.
இந்த புதிய ஆண்டின் தைத்திருநாள் பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்து மகிழ அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் பொது இடங்களுக்கு வந்துள்ளனர்.
அப்பொழுது அவர்களின் செயற்பாடுகளில் ஏற்படும் துயரங்களைப் பார்க்கும் போது தினமும் அவர்கள் தமது வீட்டில் படும் துயரங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பொதுமக்களிடையே சிந்திக்க வைத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒரு கணம் சோகமான நிலை வருகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், பொது இடங்களில் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அனேகமான சிறுவர்கள் முன்வருகின்றனர்.
இதன்படி எதிர்காலத்தில் ஊனமுற்றவர் யாவரும் கைவிடப்படமாட்டார்கள் என்பது வெளிச்சமாகியுள்ளது.