மட்டக்களப்பில் தைத்திருநாள் வழிபாடுகள்: மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை

Report Print Kumar in சமூகம்
47Shares

தைத்திருநாளை உலகெல்லாம் உள்ள இந்துக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்ற இவ்வேளை கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று(14) பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பரிபாலன சபையினரது ஏற்பாட்டில் ஆலய முன்றிலில் பொங்கல் மற்றும் பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ இரங்க வரதராஜ குருக்களினால் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் பொங்கல் பூஜையும் நடைபெற்றது.

இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்து கொண்டனர்.

தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் வீடுகளில் அதிகாலை பொங்கல் படைத்து சூரியனுக்கு நன்றி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments